தூத்தேறி! கய்தே! கஸ்மாலாம்!
இங்க நீ நிம்மதியா ரூம்ல குந்திகினு வலை மேயற..!
அங்கே எத்தனை லட்சம் அப்பாவி மக்கள்
(எல்லாரும் உன் சகோதர சகோரிகள்..!)
இருக்க இடமில்லாமல்...
உயிரிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து,
கைகால் இழந்து...
சொல்லொண்ணா துக்கத்துடன்,
துயரத்துடன்...
அடிபட்டும்...
மிதிபட்டும்...
காயப்பட்டும்...
கண்ணீர் வடித்தும்...
சித்திரவதைப் படுகிறார்களே..!
உனக்கும் துக்கம் துயரம் உண்டுதான்.
ஆனால் அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்!
உன்னுடையது பிஸ்கோத்து!
சரி1 கஷ்டமாத்தான் இருக்கு.
அதுக்கு என்னால என்ன செய்ய்ய முடியும்னா கேக்கற?
செய்யணும்-ங்கற மனசிருந்தா
ஒரு பதிவு போடவாவது உனக்குத் தோணியிருந்திருக்கா?
எங்கேனும் ஒரு பொது இடத்தில் உன் குரலை தைரியமா பதிவு செய்ய உனக்குத் துணிச்சல் இருந்திருக்கா?
நீ உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது அவர்களுக்கென ஒதுக்கும் குறைஞ்சபட்ச இரக்கமாவது இருக்கா உன்கிட்ட?
அது...
ஒண்ணுமில்லை..!
தலைவலியும், காய்ச்சலும்,
அடியும், ஆப்பும்...
அவங்கங்களுக்கு வந்தாத்தான் புரியுமோ?
இப்போ நீ இருக்கும் இந்த நிலை கூட நிரந்தரமென்றா நினைக்கிறாய்?
எப்ப வேணாலும்... எது வேணாலும் நடக்கலாம்.
-----------------------------------
இப்படில்லாம் என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.
நீங்களும் சேர்ந்து என்னைய இஷ்டத்துக்குத்... திட்டி... நல்லா அடிங்க. அழுகையா வருது மக்கா.
இதையெல்லாம் பாக்காம போய்ச் சேரலாம்னா,
இந்தப் பாழாப் போன உசிரும் போவ மாட்டேங்குது.
இதை எடுத்துக்கிட்டு அதுக்கு பதிலா,
அவங்கள்ல யாராவது ஒருத்தர்
ஒரே ஒருத்தர
நல்லா இருக்க வைக்க முடியும்னு யாரவது சொன்னா...
சத்தியமா குடுத்துடுவேன்.
என்னமோ வீர வசனம்?
இயேசு நாதர்- னுல்லாம் நினைச்சிடாதீங்க..?
ஏன்னா..?
நான் இருக்கறதும் ஒண்ணுதான்.
இல்லாததும் ஒண்ணுதான்.