
வலைப்பக்கம் அடிக்கடி வந்தாலும்... எனக்குன்னு ஒரு ப்ளாக் இருக்கிற நினைவே மறந்து போச்.
திடீர்னு பாதி ராத்திரில நம்ம பாடிகாட் முனீஸ்வரன் வந்து தட்டி எழுப்பி,
"அடேய் சாம்...! அங்க நீ இல்லாம வலைப்பதிவர் உலகமே ஸ்தம்பிச்சு போச்சு. போ. போய் சீக்கிரம் காப்பாத்துன்னு" சொல்லிச்சா?
அப்பிடியே கருப்புப் போர்வையை போர்த்திகிட்டே (குளுரு நைனா) நைட்டோட நைட்டா எழும்பி வந்து கம்பூரு முன்னாடி உக்காந்து ப்ளாக் தெறந்து... டைப்பு பண்ண ஆரம்பிச்சா...
ஹ்ம்...
இந்த பாழாப்போன எலக்ட்ரிசிட்டி போர்டு சதி பண்ணிடுச்சு...
ஒலகத்துல உள்ள எல்லா நல்ல வார்த்தைகளாலும்...(!) அர்ச்சித்துக் கொண்டே...
கொட்ட கொட்ட முழிச்சி தேவுடு காத்ததுதான் மிச்சம்.
அடப் போங்கடா-ன்னு வெறுத்து போயி... பேசாம பாடிகாட் முனிகிட்ட வெள்ளைக்கொடி காட்டிட்டிட்டு படுத்துட்டேன்.
சர்ர்ரீ..! சர்ரீ..! வந்தது வந்துட்டே...!
எதுக்கு இந்த ஓவர் பந்தால்லாம். பொழைச்சிப் போன்னு நீங்க பெருந்தன்மையா சொல்லிக்கறதா... நானே நெனைச்சிக்கிட்டு...
இப்பத்திக்கு அட்டண்டன்ஸ் மட்டும் போட்டுப்புட்டு அப்பீட் ஆயிக்கறேன். அப்பாலிக்கா ரிப்பீட்டாவோமுல்ல...!
13 comments:
//இந்த பாழாப்போன எலக்ட்ரிசிட்டி போர்டு சதி பண்ணிடுச்சு...//
அந்த தொடர் சதிய ஒண்ணும் பண்ண முடியாது.
உங்க பதிவுகளுக்காக நாங்களும் காத்திருக்கோம்ல
வாங்க வாங்க நண்பரே - நலமா
வந்ததுதான் வந்தீங்க....உருப்படியான பதிவோட வருவீங்கன்னு பார்த்தா?????/
உங்க பதிவுகளுக்காக நாங்களும் காத்திருக்கோம் !
என்ன சாம் தம்பி!
எப்படி இருக்கீங்க? அப்பப்ப மூஞ்சை காட்டிக்கிட்டு இருக்கலாம்ல ...
Kalyani Suresh said...
//அந்த தொடர் சதிய ஒண்ணும் பண்ண முடியாது.//
:-( :-( :-(
cheena (சீனா) said...
//வாங்க வாங்க நண்பரே - நலமா//
வந்துட்டேன் நண்பரே. நலத்துக்கென்ன குறைவு. நலம். நலம். நலம்.
அன்புடன் அருணா said...
//வந்ததுதான் வந்தீங்க....உருப்படியான பதிவோட வருவீங்கன்னு பார்த்தா????? //
இன்னா..தூ... உருப்படியான பதிவா? அப்பிடின்னா?
என்னிக்கு நாங்கல்லாம் (தப்பு. நானு)உருப்படியான பதிவு போட்டுருக்கோம்.
இன்னா டமாஸ் பண்றீங்களா அருனா மேடம்.?
உங்க லெவல் சமூக சிந்தனை எங்களுக்கு வருமா?
(கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ மாற்றங்கள். நீங்க பிரின்ஸிபாலா பதவி உயர்வு பெற்றிருப்பதாக அறிகிறேன். பதவி உயர்வுக்கு மை பீலேட்டட் விஷ்ஷஷ்- ஐ தெரிவிச்சுக்கறேன்.)
அன்புடன் அருணா said...
// வந்ததுதான் வந்தீங்க....உருப்படியான பதிவோட வருவீங்கன்னு பார்த்தா????? //
என்னமோ உள்குத்து கீறாப்பல தீசல் வாசனை அடிக்குது மை லார்ட். (இருக்கட்டும் கண்ணு. அடுத்த வம்புக்கு மேட்டர் கெடைச்சாச்சு. )
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
// உங்க பதிவுகளுக்காக நாங்களும் காத்திருக்கோம் ! //
வாங்க பாஸ்கர்.! வாங்க.! இனிமே பட்டைய கிளப்புவோமில்ல.
தருமி said...
// என்ன சாம் தம்பி!
எப்படி இருக்கீங்க? அப்பப்ப மூஞ்சை காட்டிக்கிட்டு இருக்கலாம்ல ...//
வாங்க தருமி அண்ணே! வாங்க வாங்க!
இங்க அக்கம் பக்கத்து பசங்கல்லாம் தெனைக்கும் என் மூஞ்ச பாத்து பயந்து கெடக்கறாங்க.
:-)
சரி! பெரியவங்க நீங்களே சொல்லிட்டீங்களா?
இனிமே அப்பப்ப இல்ல. அடிக்கடியே காட்டறேன்.
//இனிமே அப்பப்ப இல்ல. அடிக்கடியே காட்டறேன். //
...........இது .....
நல்ல பிள்ளைக்கு அழகு இதுதான்.
தருமி said...
// ...........இது .....
நல்ல பிள்ளைக்கு அழகு இதுதான் //
நன்றி அண்ணா.
Post a Comment
விருப்பப் பட்டவங்க, புடிச்சிருந்தா வாய்க்கு வந்தபடி திட்டுங்க. ஹி! ஹி!