Monday, March 29, 2010

ராம சோகம்..!சீதையின் பிரிவில்,

ராமன் எப்படி அழுதிருப்பான் என...
என் கண்ணீரைக் கேட்டுப்பார்.

கதை கதையாய்ச் சொல்லும்.

உன் புறக்கணிப்பின் துயரத்துடனான,
கொடுவலி தாங்கியபடி...

இன்னும் எப்படிச் சாகாமல் இருக்கிறேன்,
என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு...

என்றேனும் நீ வருவாய்...
எனக்கே எனக்கு மட்டுமான,
என் தருணங்களை...
மீட்டுத் தருவாய்...

எனும் பெரு நம்பிக்கையுடன்...
நகர்த்துகிறேன் நாட்களை.

Saturday, March 27, 2010

டர்ரா...? டரியலா...?இதனால,

நம்ம நண்பர் சீனா...
அண்ணன் தருமி...
செய்ப்பூரு அருணா...

பேரர் வால்Buyer(பையர்)பேரனை மரியாதை கொடுத்து பேரர்- என்றுதானே சொல்லணும்.

மற்றும் சகலமான வலைப்பதிவச் சொந்தங்களுக்கும்..,
தெரிவிச்சிக்கறது என்னான்னா...

என்னான்னா...?

என்னான்னா... ஆ...?

என்னான்னா... ஆ... ஆ...?

ஆங்...

ம்ம்ம்ம்ம்....

என்ன சொல்ல வந்தேன்...?

(மண்டைய சொறிஞ்சிட்டு வரேன் இருங்க...)

ஆங்... யெஸ்..!

தன்னுடைய சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் எதோ ஒரு பறவை மாதிரி... (பீனிக்ஸ்-தானே?)

சாம் ஆகிய நானும் மீண்டும்... எழுந்து வந்துட்டன் என தாள்மையுடன் தெரிவிச்சுக்கறேன்.

இனிமே...

டர்ரா...? டரியலா...?

ஒண்ணும் புரியலே...?

ஹி... ஹி... ஹி...

எல்லாப் புகளும்... இறைவனுக்கே..!

Sunday, September 13, 2009

நானெல்லாம் மனுசன்தானா?
தூத்தேறி! கய்தே! கஸ்மாலாம்!
இங்க நீ நிம்மதியா ரூம்ல குந்திகினு வலை மேயற..!

அங்கே எத்தனை லட்சம் அப்பாவி மக்கள்
(எல்லாரும் உன் சகோதர சகோரிகள்..!)
இருக்க இடமில்லாமல்...
உயிரிழந்து
வீடிழந்து
வாழ்விழந்து,
கைகால் இழந்து...
சொல்லொண்ணா துக்கத்துடன்,
துயரத்துடன்...

அடிபட்டும்...
மிதிபட்டும்...
காயப்பட்டும்...
கண்ணீர் வடித்தும்...
சித்திரவதைப் படுகிறார்களே..!

உனக்கும் துக்கம் துயரம் உண்டுதான்.

ஆனால் அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்!
உன்னுடையது பிஸ்கோத்து!

சரி1 கஷ்டமாத்தான் இருக்கு.

அதுக்கு என்னால என்ன செய்ய்ய முடியும்னா கேக்கற?

செய்யணும்-ங்கற மனசிருந்தா
ஒரு பதிவு போடவாவது உனக்குத் தோணியிருந்திருக்கா?

எங்கேனும் ஒரு பொது இடத்தில் உன் குரலை தைரியமா பதிவு செய்ய உனக்குத் துணிச்சல் இருந்திருக்கா?

நீ உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது அவர்களுக்கென ஒதுக்கும் குறைஞ்சபட்ச இரக்கமாவது இருக்கா உன்கிட்ட?

அது...
ஒண்ணுமில்லை..!

தலைவலியும், காய்ச்சலும்,
அடியும், ஆப்பும்...
அவங்கங்களுக்கு வந்தாத்தான் புரியுமோ?

இப்போ நீ இருக்கும் இந்த நிலை கூட நிரந்தரமென்றா நினைக்கிறாய்?

எப்ப வேணாலும்... எது வேணாலும் நடக்கலாம்.

-----------------------------------

இப்படில்லாம் என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.

நீங்களும் சேர்ந்து என்னைய இஷ்டத்துக்குத்...

திட்டி... நல்லா அடிங்க.

அழுகையா வருது மக்கா.

இதையெல்லாம் பாக்காம போய்ச் சேரலாம்னா,
இந்தப் பாழாப் போன உசிரும் போவ மாட்டேங்குது.

இதை எடுத்துக்கிட்டு அதுக்கு பதிலா,
அவங்கள்ல யாராவது ஒருத்தர்
ஒரே ஒருத்தர
நல்லா இருக்க வைக்க முடியும்னு யாரவது சொன்னா...

சத்தியமா குடுத்துடுவேன்.

என்னமோ வீர வசனம்?
இயேசு நாதர்- னுல்லாம் நினைச்சிடாதீங்க..?

ஏன்னா..?
நான் இருக்கறதும் ஒண்ணுதான்.
இல்லாததும் ஒண்ணுதான்.

Saturday, September 12, 2009

ஜெய்ப்பூருக்கு சென்னையின் பதில்..! (கண்டிப்பா படிங்க) ஹி..! ஹி..!முதல்ல கொஞ்சம் கோவம் வந்துச்சு.
அப்புறம் அது இன்னும் அதிகமாச்சு.

என்னமோ உருப்படாதவர்களின் சங்கத் தலைவனே
நாந்தான்ங்கிற மாதிரி...

இந்த ஜெய்ப்பூர் அருணா பொண்ணு
இப்பிடி ஒரு பின்னூட்டம் போடும்-னு
நான் எதிர்பார்க்கவே இல்லை.

நீங்களே பாருங்கப்பு!

அன்புடன் அருணா said...

//வந்ததுதான் வந்தீங்க....
உருப்படியான பதிவோட வருவீங்கன்னு பார்த்தா????? //

நானே என்னமோ, ஏதோ,
அப்பிடி இப்பிடி,
தத்து பித்துன்னு ]
ஒளறிக் கொட்டி
சும்மாச்சிக்கும்-ன்னு
ஒரு பதிவு போட்டா,
அதுலையும்... உருப்படியான பதிவா போடணுமாம்.

அடங்கப்பா... முருகா...
உருப்படியா ஒரு பதிவுக்கு நான் எங்க போறது.

அதுக்காக மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சம்னா,
நம்ம மூளை ஒழுகி காது வழியா வந்துடாதா?

அட அப்பிடியே யோசீச்சு பதிவு போட்டாலும்,
அதைப் படிக்கிறப்ப என் எழுத்தினுடைய
வீரியம், வெம்மை
(அவ்வ்னு யாருப்பா கத்தறது)
தாங்க முடியாம உங்க கண்ணு அவிஞ்சி பூடாதா?

சத்தியமா கண்ணுகளா, உங்க நலன் கருதித்தான்
நான் உருப்படியான பதிவு எதுவும் போடறதில்லைன்னு
இப்பவாவது புரிஞ்சிக்குங்க..


நண்பர் சீனா..!
அருணா-வுடைய குற்றச்சாட்டை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

முன்ன பின்ன பார்த்து நல்ல(!!!) தீர்ப்பா குடுங்க மை லார்ட்.

பின்னூட்டத்துல பின்னி எடுங்க. (அட என்னையத்தான் கண்ணுகளா)

Friday, September 11, 2009

சும்மா ஒரு அட்டெண்டன்ஸ்..!வலைப்பக்கம் அடிக்கடி வந்தாலும்... எனக்குன்னு ஒரு ப்ளாக் இருக்கிற நினைவே மறந்து போச்.

திடீர்னு பாதி ராத்திரில நம்ம பாடிகாட் முனீஸ்வரன் வந்து தட்டி எழுப்பி,
"அடேய் சாம்...! அங்க நீ இல்லாம வலைப்பதிவர் உலகமே ஸ்தம்பிச்சு போச்சு. போ. போய் சீக்கிரம் காப்பாத்துன்னு" சொல்லிச்சா?

அப்பிடியே கருப்புப் போர்வையை போர்த்திகிட்டே (குளுரு நைனா) நைட்டோட நைட்டா எழும்பி வந்து கம்பூரு முன்னாடி உக்காந்து ப்ளாக் தெறந்து... டைப்பு பண்ண ஆரம்பிச்சா...
ஹ்ம்...
இந்த பாழாப்போன எலக்ட்ரிசிட்டி போர்டு சதி பண்ணிடுச்சு...

ஒலகத்துல உள்ள எல்லா நல்ல வார்த்தைகளாலும்...(!) அர்ச்சித்துக் கொண்டே...
கொட்ட கொட்ட முழிச்சி தேவுடு காத்ததுதான் மிச்சம்.

அடப் போங்கடா-ன்னு வெறுத்து போயி... பேசாம பாடிகாட் முனிகிட்ட வெள்ளைக்கொடி காட்டிட்டிட்டு படுத்துட்டேன்.

சர்ர்ரீ..! சர்ரீ..! வந்தது வந்துட்டே...!
எதுக்கு இந்த ஓவர் பந்தால்லாம். பொழைச்சிப் போன்னு நீங்க பெருந்தன்மையா சொல்லிக்கறதா... நானே நெனைச்சிக்கிட்டு...
இப்பத்திக்கு அட்டண்டன்ஸ் மட்டும் போட்டுப்புட்டு அப்பீட் ஆயிக்கறேன். அப்பாலிக்கா ரிப்பீட்டாவோமுல்ல...!

Sunday, September 21, 2008

சாம் தாத்தா சாவலை! உசுரோடதான் இருக்கேன்!சாகலாம்னு முடிவு பண்ணி, செத்தும் போயிட்டேன்.
வைகுண்டத்துக்கு போனா...
(கிறிஸ்தவனுக்கு ஏதுப்பா வைகுண்டம்னு கேக்காதீங்க. நம்பளுக்கு எல்லா மதமும் Accepted. )
அங்க மகாவிஷ்ணு (எனக்கு ரொம்ப பிடிச்ச சாமி) என்னைய ஒருமாதிரி பாத்தாரு.
"ஏண்டா பூமியக் கெடுத்தது பத்தாதுன்னு இங்க வேற வந்துட்டியா"- ன்னு மெதுவா முனகின மாதிரி இருந்திச்சு.
அப்பவே புரிஞ்சு போச்சு. நானே யோசிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன்.
(நாம போக வேண்டிய இடம் நரகமாச்சே.
"பங்காளி லூஸிஃபேர்" கைவிட்டுட்டாரோ
- ன்னு, சாக்ரட்டீஸ் ரேஞ்சுக்கு மண்டைய சொறிஞ்சிட்டே பின்னாடி வாலை திருகிட்டே யோசிக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தேன்.)

மகா விஷ்ணு வாய் மலர்ந்தார்.
"ஏம்பா சாம்., நீ வர வேண்டிய இடம் இது இல்லப்பா.
(ஆஹா இனி ஸ்ட்ரெய்ட்டா நரகம்தான்.)
யாரங்கே இவனை சிவலோகம் அழைத்துச் செல்லுங்கள்"
(போச்சுடா. புஸ்ஸ்ஸ்...!)
அங்க போனா... சிவபெருமான், நெத்திக்கண்ணத் தெறக்க ரொம்ப முஸ்தீபா இருந்தார்.
"எலே! யாருலே உன்னைய இங்க உள்ள விட்டது"
(ஆஹா நரகம் போகப் போறோம்.)
"கிளம்புலே சத்திய லோகத்துக்கு!"
(மறுபடியும் புஸ்ஸ்ஸா!)
அங்க பிரம்மா எட்டுக் கண்ணையும் மூடி தியானத்துல....
சரஸ்வதி அம்மாதான் பேசினாங்க.
"மகனே சாம்! இப்பத்தான் நாங்க கொஞ்சம் நிம்மதியா, இருக்கோம். நீ வேறெங்கயாவது போயிடேன்!"
உடனே... கௌரவம் படத்துல இளம் சிவாஜி கணக்கா...
"நான் எங்க போவேன். நேக்கு யாரத் தெரியும்? போகணும்னு மட்டுந்தான் தோணறது. ஆனா எங்க போறதுன்னு தோணலியே.?" சொல்லு தாயே சொல்லு- ன்னு
என் அழுகாச்சியப் பாத்துட்டு...
அவங்களே மனமிரங்கி அவங்க வீட்டுக்காரரை எழுப்பி, ஒரு ரெக்கமண்டேஷன் லெட்டர் எழுதிக் குடுக்கச் சொல்லி (இத எடுத்துட்டு நீ எங்க போனாலும் இடம் கிடைக்கும். போ!)- ன்னு அனுப்பிட்டாங்க.

அடுத்தது விடு ஜூட்... கிற்ஸ்தவர்களின் சொர்க்கம் எனப்படு.ம்.. பரதேஸ் எனப்படும் Paradise.

அங்க கேட் வாட்ச்மேன் "ராயப்பர்" அதாம்பா பீட்டர் (Peter) பிரம்மாவுடைய லெட்டரப் கால்மணி நேரமா உத்து உத்து பாத்துட்டு....(மறக்காம, "பிரம்மா நல்லாயிருக்காரா-" ன்னு கேட்டாரு)
"ஏதோ புரியற மாதிரி இருக்கு, ஆனா ஒண்ணும் புரியல!
(பின்ன! பிரம்மா எல்லாருக்கும் தலையெழுத்த எழுதற பேனாவால, எழுதும்போதே நெனச்சேன். எனக்கு ஒரு பெரிய டவுட். அவரு எழுதற எழுத்த அவராலயே படிக்க முடியுமா?)
"தவிரவும் யேசு நாதர் உன்னய இங்க பாத்தா, அடிச்சே துரத்திடுவாரு! சொல்லாம கொள்ளாம ஓடிப் பூடு" ங்கவும்...

அடுத்தததா கிறிஸ்தவர்களின் நரகம்.
(ஹைய்யா! ஒரு வழியா நம்மளுக்குப் பிடிச்ச இடம்!)
நான் வரேன்னு தெரிஞ்ச உடனே அதன் தலைவர், "நம்ம பங்காளி லூஸிஃபேர்" தன் ரத, கஜ, துரக பதாதிகளுடன்... வெளிலயே வந்துட்டார்.

நம்மளுக்கு இத்தினி வரவேற்பா... ன்னு பாத்தா...
அவரு கண்கலங்க என் கையப் பிடிச்சுட்டுச் சொன்னார்.

"ராசா1 சாம்.! நீ இங்க ஒரு சாதாரண அங்கத்தினரா வரலாமா? ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கலாமா? எனக்கு இப்ப ரொம்ப வயசாயிடுச்சு. சீக்கிரமே ரிட்டையர் ஆயிடுவேன். அதுக்கப்புறம் நீ வந்து எனக்கப்புறம் இந்த நரகத்தின் தலைவர் பதவியை ஏத்துக்கோ"
(அடப்பாவிப் பங்காளி! நீ எப்படா எங்கூரு அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்ச?)

அடுத்து எமலோகத்துலையும் ரிஜக்ட்டட்.

கடைசீயில... நொந்து நூலாயி...
நடு வானத்துலயே நின்னு... இந்த உலகத்துல உள்ள அத்தினி கடவுள் பேரையும் சொல்லிக் கூப்பாடு போட்டு, குய்யோ முறையோ- ன்னு நான் கத்தவும்....
ஒரே களேபரமாயி...
அப்புறமா எல்லாக் கடவுளும், ஒண்ணு கூடிப் பேசி... ஒரு முடிவுக்கு வந்து என் பங்காளி "லூஸிஃபேரையே" விட்டு என்கிட்ட சமாதானம் பேச அனுப்புனாங்க.

அவரும் பதவிசா வந்து...
"தம்பி! ராசா! சாம்! நீ இங்க வந்து என்னத்த சாதிக்கப் போற.?
அங்க உன் நண்பர் சீனாவும், ஜெய்ப்பூர் அருணாவும், ரசிகன், இன்னும் உன் வலைப்பூ... சொந்த பந்தங்களெல்லாரும் உன்னைய காணாம தேடோ தேடுன்னு, தேடறாங்களாம்.
(அட! நம்மளக்கூட காணாம்-னு தேடறாங்களாமா? )
இருந்தாலும் விடாப்பிடியாய்
"ஊஹும்., நான் போ மாட்டேன்னு, நான் உன் கூடதான் இருப்பேன்!" நான் பிடிவாதம் பிடிக்கவும்...

"சொன்னாக் கேளுடாக் கண்ணு! நீ நரகத்துல வந்து செய்யிற சேவைய , பூமியில பிளாக் எழுதி செய்யி. உன்னளவுக்கு, எழுத்துலயே மக்களைக் கொடுமைப் படுத்த என்னால கூட முடியாதுடா ராசா.- ன்னு பங்காளி ஐஸ் வைச்சுக் கெஞ்சவும்...
பின்னாடி வாலு துறு துறுக்க ஆரம்பிச்சிடுச்சு.
சரி... கடைசியா இந்தத் தகவலை மட்டும் கேட்டுக்கோ. அதுக்கப்புறம்...
நீ போனா போ... இருந்தா இரு.
உன் பேரன் "Deamzz" மறுபடியும் எழுத வந்துட்டானாம்- ன்னு சொன்னதுதான்....
அடுத்த வார்த்தையக் கேக்க, அங்க நான் இருந்தாதானே.
இதோ உங்களுக்காக கீபோர்டத் தட்டிட்டு இருக்கேன்..
----------------------------------------------------------------------------------
உனக்கு சூடு, சொரணை இல்லியா? (அப்பிடின்னா?)
"சாம் தாத்தா காலமாகிறார்-னு" பதிவு போட்டுட்டு , எந்த முகத்தோட மறுபடி வலைப்பூ பக்கம் வந்தே? (அதே குரங்கு முகம்த்தோடுதான்.)
இப்பிடில்லாம் நீங்க கேள்வி கேட்டீங்கன்னா, கேடித்தனமா அந்த சம்பத்தப்பட்ட பதிவையே அழிச்சுட்டு... "நான் எப்போ சாம் தாத்தா காலமாறார்"- னு எழுதினேன்னு... ஒரு பெரிய்ய 'புளுகு மூட்டைய அவுத்து விட எனக்குத் தெரியாதா?

----------------------------------------------------------------------------------
அதான் வந்துட்டமுல்ல?
அப்புறம் ஏன் திட்டறீங்க?

இப்பிடி சொல்லிப்புட்டாங்க..!


Subscribe Now: google

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Add to Google Reader or Homepage

Subscribe in NewsGator Online

Subscribe in Rojo

Add to My AOL

Add to netvibes

Subscribe in Bloglines

Add to Plusmo

Subscribe in NewsAlloy

Add to Excite MIX

Add to netomat Hub

Add to fwicki

Add to flurry

Add to Webwag

Add to Attensa

Receive IM, Email or Mobile alerts when new content is published on this site.

Add ???? ?????????? Mokkai-??? to ODEO

Subscribe in podnova

Add to Pageflakes

Powered by FeedBurner

I heart FeedBurner

Add to The Free Dictionary

Subscribe as Plain Text

Subscribe to ???? ?????????? Mokkai-???

FeedBurner FeedCount