
முதல்ல கொஞ்சம் கோவம் வந்துச்சு.
அப்புறம் அது இன்னும் அதிகமாச்சு.
என்னமோ உருப்படாதவர்களின் சங்கத் தலைவனே
நாந்தான்ங்கிற மாதிரி...
இந்த ஜெய்ப்பூர் அருணா பொண்ணு
இப்பிடி ஒரு பின்னூட்டம் போடும்-னு
நான் எதிர்பார்க்கவே இல்லை.
நீங்களே பாருங்கப்பு!
அன்புடன் அருணா said...
//வந்ததுதான் வந்தீங்க....
உருப்படியான பதிவோட வருவீங்கன்னு பார்த்தா????? //
நானே என்னமோ, ஏதோ,
அப்பிடி இப்பிடி,
தத்து பித்துன்னு ]
ஒளறிக் கொட்டி
சும்மாச்சிக்கும்-ன்னு
ஒரு பதிவு போட்டா,
அதுலையும்... உருப்படியான பதிவா போடணுமாம்.
அடங்கப்பா... முருகா...
உருப்படியா ஒரு பதிவுக்கு நான் எங்க போறது.
அதுக்காக மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சம்னா,
நம்ம மூளை ஒழுகி காது வழியா வந்துடாதா?
அட அப்பிடியே யோசீச்சு பதிவு போட்டாலும்,
அதைப் படிக்கிறப்ப என் எழுத்தினுடைய
வீரியம், வெம்மை
(அவ்வ்னு யாருப்பா கத்தறது)
தாங்க முடியாம உங்க கண்ணு அவிஞ்சி பூடாதா?
சத்தியமா கண்ணுகளா, உங்க நலன் கருதித்தான்
நான் உருப்படியான பதிவு எதுவும் போடறதில்லைன்னு
இப்பவாவது புரிஞ்சிக்குங்க..
நண்பர் சீனா..!
அருணா-வுடைய குற்றச்சாட்டை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
முன்ன பின்ன பார்த்து நல்ல(!!!) தீர்ப்பா குடுங்க மை லார்ட்.
பின்னூட்டத்துல பின்னி எடுங்க. (அட என்னையத்தான் கண்ணுகளா)
17 comments:
சாம் அன்ணே
சின்னப் பொண்ணூக ( பிரின்சிபால் ) சொல்றதெல்லாம் கேக்காதீக - சும்மாவாச்சிம் ஏத்தி வுடுவாங்க - நீங்க உங்க பாணியிலே தொடருங்க - ஆமா - நான் ஜெய்ப்பூர் போய் சொல்லிடறேன்
I'm the first.
cheena (சீனா) said...
//சாம் அன்ணே //
என்ன நண்பரே..! கடைசியில இப்பிடி என்னை அண்ணனாக்கிட்டீங்க.
நீங்க என் நண்பர். நண்பர். நண்பர்.
// சின்னப் பொண்ணூக ( பிரின்சிபால் ) சொல்றதெல்லாம் கேக்காதீக //
அதானே..! அப்பிடி சொல்லுங்க நண்பரே.
// சும்மாவாச்சிம் ஏத்தி வுடுவாங்க //
பின்ன இதுக்கெல்லாம் நாங்க அசருவமா?
// நீங்க உங்க பாணியிலே தொடருங்க - ஆமா //
அப்பா... இப்பதான் மனசு குளுந்துச்சு.
ஹி.. ஹி..
// நான் ஜெய்ப்பூர் போய் சொல்லிடறேன் //
இதான் இடுக்கண் களைவதாம் நட்பு.
:-)
நன்றி நண்பரே.
/////என்னமோ உருப்படாதவர்களின் சங்கத் தலைவனே
நாந்தான்ங்கிற மாதிரி...///
அப்போ அது நீங்க இல்லியா?? என்னடா உருப்படாதவர்களின் சங்கத்துக்கு வந்த சோதனை??
(அவ்வ்வ்வ்ன்னு போட்டாதானே நல்லா இருக்கும்.. அதனால இந்த)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
///அடங்கப்பா... முருகா...///
ஆமாம் முருகனை எதுக்கு அடங்க சொல்றீங்க???
அவரு அடங்கவே மாட்டாரே என்னா பன்ன போறீங்க???
///நம்ம மூளை ஒழுகி காது வழியா வந்துடாதா?///
அது இருக்குறவங்க தானே கவலப்படனும்???
நீங்க அடிச்சி தூள் கிளப்புங்க
///அதைப் படிக்கிறப்ப என் எழுத்தினுடைய
வீரியம், வெம்மை
(அவ்வ்னு யாருப்பா கத்தறது) ///
அவ்வ்வ்வ்வ் ...
( நான் இல்லப்பா!!! மீ த எஸ்கேப்ப்பு...)
////பின்னூட்டத்துல பின்னி எடுங்க.///
பின்னின்னா? எது?? அந்த பின்னி மில்ஸ்ஸா??
கல்யாணி சுரேஷ் said...
// I'm the first. //
இல்லியே.! இல்லியே! நண்பர் சீனாதானே ஃபர்ஸ்ட்டு.
உருப்புடாதது_அணிமா said...
// அப்போ அது நீங்க இல்லியா?? என்னடா உருப்படாதவர்களின் சங்கத்துக்கு வந்த சோதனை??
(அவ்வ்வ்வ்ன்னு போட்டாதானே நல்லா இருக்கும்.. அதனால இந்த)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//
அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும் ராசா.
இன்னொரு பெரிய அவ்வ்வ்வ் கூட போட்டுக்கலாமே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
அட...நம்மளை வைச்சு இப்படி ஒரு படம் ஓடிக்கிட்டு இருக்கா??? இருக்கட்டும்....இருக்கட்டும்....
ம்ம்ம்...நல்லதுக்குக் காலமேயில்லை!
உருப்புடாதது_அணிமா said...
// ஆமாம் முருகனை எதுக்கு அடங்க சொல்றீங்க???
அவரு அடங்கவே மாட்டாரே என்னா பன்ன போறீங்க??? //
"அட எங்க அப்பா முருகா" ங்கிறதை எனக்கு தெரிஞ்ச தூய தமிழ்ல சொன்னேன்.
பாத்து ராசா..! நீ பாட்டுக்கு ஏத்திவிட்டு, அப்புறம்
தெய்வக் குத்தம்-னு யாராவது அடிக்க வருவாய்ங்க.
உருப்புடாதது_அணிமா said...
///நம்ம மூளை ஒழுகி காது வழியா வந்துடாதா?///
அது இருக்குறவங்க தானே கவலப்படனும்???
நீங்க அடிச்சி தூள் கிளப்புங்க //
என்னைய பத்தி நல்லா தெரிஞ்சு வச்சுருக்க.
ஹி! ஹி!
உருப்புடாதது_அணிமா said...
///அதைப் படிக்கிறப்ப என் எழுத்தினுடைய
வீரியம், வெம்மை
(அவ்வ்னு யாருப்பா கத்தறது) ///
அவ்வ்வ்வ்வ் ...
( நான் இல்லப்பா!!! மீ த எஸ்கேப்ப்பு...)///
இரு... இரு... என் சேர் அடியில எங்ஙனயாவது பாம் வச்சிருக்கப் போற.
எதுக்கும் செக் பண்ணிக்கிறேன்.
ஸ்ஸ்ஸ்... அப்பாடா... நீ ரெம்ப நல்லவன்-னு எனக்குத் தெரியும் பேராண்டி!
(சாம். தாத்தாவுக்கே பாம்-ன்னு ஒரு மொக்கை பதிவுக்கு மேட்டர் கிடைச்சிடுச்சு இல்ல. )
சாம் தாத்தா said...
உருப்புடாதது_அணிமா said...
////பின்னூட்டத்துல பின்னி எடுங்க.///
பின்னின்னா? எது?? அந்த பின்னி மில்ஸ்ஸா?? /////
ஹி.1 ஹி!
ஒரே பதிவுக்கு 5 பின்னூட்டம் போட்ட உன் தாராள மனசு யாருக்கு வரும், சொல்லு.
ரொம்ப நன்றி பேராண்டி.
நீ நல்லா
இருக்கணும்.
அன்புடன் அருணா said...
// அட...நம்மளை வைச்சு இப்படி ஒரு படம் ஓடிக்கிட்டு இருக்கா??? இருக்கட்டும்....இருக்கட்டும்....
ம்ம்ம்...நல்லதுக்குக் காலமேயில்லை! //
வாம்மா மின்னல். எனக்குத் தெரிஞ்ச வலைஞர்கள்ல ரொம்ப சாது நீ மட்டும்தான்னு எனக்குத் தெரியாதா கண்ணு? (இந்த ஐஸுக்கு மத்தவங்க யாரும் கோவிச்சுக்கக் கூடது ஆண்டவா!)
இல்லன்னா இன்னேரம் சைதாப்பேட்டைல இருந்து, அடியாளுங்க உருட்டுக் கட்டை,
சைக்கிள் செயின்,
பிச்சுவா,
வீச்சருவா" சகிதமா என்னைய அலேக்கா தூக்க்கிட்டிருக்க மாட்டாங்களா?
ஹி! ஹி!
பாக்கிறதே கஷ்டமா இருக்கே .. அடிக்கடி வந்து போங்கன்னு ஒரு தடவை சொன்னா புரியாதா? ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டா என்ன .... ?
Post a Comment
விருப்பப் பட்டவங்க, புடிச்சிருந்தா வாய்க்கு வந்தபடி திட்டுங்க. ஹி! ஹி!